IRCTC உடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

IRCTC உடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IRCTC டிக்கெட் முன்பதிவு:
நவீன இணைய உலகில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலமாக நடக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.

ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாகியுள்ளது.

இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும்.

தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

இருப்பினும், ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது. எளிய வழிமுறைகள்:
முதலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலின் https://www.irctc.com/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில், “சுயவிவர தாவல்” என்ற தேர்வை தேர்வு செய்து அதில் “ஆதார் கேஒய்சி” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது முகப்பு பக்கத்தில் எனது கணக்கு பகுதியை தேர்வு செய்து உங்கள் ஆதார் விருப்பத்திற்கான இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு ‘Send OTP’ என்று கிளிக் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் OTP வந்தவுடன் அதனை இந்த பக்கத்தில் உள்ளிட்ட வேண்டும்.

இப்பொழுது சரிபார்ப்பு என்பதை தேர்வு செய்து, அது சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் kyc விவரங்கள் திரையில் வரும்.

அதனை உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும்.

கடைசியாக, உங்கள் ஆதார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கை வெற்றிகரமாக இணைக்க புதுப்பிப்பு பட்டனை அழுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews