முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
IRCTC பயனர்கள்:
நவீன யுகத்தில் அனைத்து வசதிகளும் இணையத்தின் மூலம் நடைபெற்று வரும் நிலையில், ரயில் பயணத்திற்கான முன்பதிவும் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகல்வல்களையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. இந்நிலையில், IRCTC நிர்வாகம் இந்த செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்ய முடியும். தற்போது ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். இருப்பினும் ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.
12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான படிகள்:
ஐ.ஆர்.சி.டி.சி பதிவுசெய்த பயனர் தனது சுயவிவரத்தில் ஆதார் கே.ஒய்.சி விருப்பத்தைப் பயன்படுத்தி தன்னை ஆதார் சரிபார்க்க வேண்டும்.
பயனரின் ஆதார் தனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ அனுப்புவதன் மூலம் சரிபார்க்கப்படும். OTP வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டால், பயனரின் ஆதார் சரிபார்க்கப்படுவர்.
முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியின் ஆதார் ஆவணமாவது சரிபார்க்கப்பட வேண்டும். சரிபார்க்கப்பட்ட பயணிகளை, பயணிகள் பட்டியலில் சேமிக்க வேண்டும். ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்கு பின்னர் டிக்கெட் முன்பதிவு செயல்முறையை தொடங்குவதற்கு முன்பு இதை செய்ய வேண்டும்.
ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை கூடுதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயனர் முன்பதிவு நேரத்தில் முதன்மை பட்டியலில் இருந்து ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணியின் பெயரை சேர்க்கலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடியை ஆதார் மூலம் சரிபார்க்கும் முறை:
முதலில் www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
‘MY ACCOUNT’ என்ற பிரிவில், ‘ Link Your Aadhaar’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது, ஆதார் கே.ஒய்.சி பக்கம் தோன்றும், அதில் ஆதார் அட்டையின் படி உங்கள் பெயரை உள்ளிடவும், ஆதார் எண் அல்லது மெயில் ஐடியை வழங்க வேண்டும். இப்பொழுது ‘Send OTP’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
KYC பதில் ஆதாரிலிருந்து பெறப்படுகிறது. ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க ‘Update’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்..
இப்பொழுது உறுதியான செய்தி திரையில் தோன்றும்.இப்பொழுது அந்த பக்கத்தை மூடி விட்டு, மீண்டும் www.irctc.co.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
இப்பொழுது MY ACCOUNT பகுதியில் சென்று உங்களது ஆதார் KYC நிலைமையினை சரிபார்க்கலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.