கொரோனாவால் உயிரிழந்த ESI பயனாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – ESI அலுவலகம் அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، يوليو 10، 2021

Comments:0

கொரோனாவால் உயிரிழந்த ESI பயனாளர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் – ESI அலுவலகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இஎஸ்ஐ சந்தா பிடிக்கப்படும் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பங்களுக்கு 90 சதவிகித நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் என சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது. இஎஸ்ஐ கிளை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கொரோனாவால் பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். மேலும் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் இறந்ததால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு நிறுவனம் அல்லது கடையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ வசதி வழங்கப்படுகிறது.

அதாவது 21 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் வாங்கும் அனைவருக்கும் இஎஸ்ஐ கட்டாயமாகும். இவர்கள் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக சிகிச்சை பெறலாம். மேலும் அறுவை சிகிச்சை, விபத்து போன்றவற்றிற்கு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இந்த தொகை பெற இஎஸ்ஐ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட மாட்டாது. இந்நிலையில் இது குறித்து சென்னை தண்டையார்பேட்டை இஎஸ்ஐ கிளை அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஎஸ்ஐ திட்டத்தில் சேர்ந்துள்ள பணியாளர் இறந்து விட்டால், பணியாளர் குடும்பத்திற்கு 90 சதவீதம் நிரந்தர மாதாந்திர ஓய்வூதியம் கொடுக்கப்படும் எனவும் உயிரிழந்த பணியாளரின் குழந்தைகள் 25 வயதை அடையும் வரை, பெண் குழந்தையாக இருந்தால் திருமணம் வரை ஓய்வூதிய நன்மைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ஒரு பணியாளருக்கு கொரோனா நோய் வருவதற்கு முன்னதாக ESIC இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة