EPF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 08، 2021

Comments:0

EPF அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுப்பது எப்படி? முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தொடர்ந்து நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் EPFல் கொரோனா சிகிச்சைக்கு பணம் எவ்வாறு எடுக்கலாம் என்பது குறித்து காணலாம்.


கொரோனா சிகிச்சை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய்க்கு பல அரசு மருத்துவமனைகளில் சிறந்த சிகிச்சைகள் வழங்கப்படுகிறது, இருந்த போதிலும் படுக்கை வசதி இல்லாத காரணத்தால் பலர் தனியார் மருத்துவமனைகளை தேடி சென்று லட்ச கணக்கில் செலவு செய்கின்றனர். கொரோனா சிகிச்சைக்காக பல வங்கிகளில் லோன் வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்தும் ரூ.1 லட்சம் வரை தொகை வழங்கப்படுகிறது. முன்னதாக மருத்துவ தேவைகளுக்கு PF மூலமாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்காக மருத்துவ சான்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த பேரிடர் காலத்தில் எந்த வகையான சான்றிதழும் சமர்பிக்காமல் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்காக சில நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.


PF பணம் எடுக்க நிபந்தனைகள்:

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சம்மந்தப்பட்ட ஊழியர் அல்லது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் பி.எப் அலுவலர் நேரில் வந்து விசாரணை செய்த பின்னர் வழங்கப்படும். ஊழியர் அல்லது எந்தவொரு குடும்ப உறுப்பினரும் மருத்துவமனை மற்றும் நோயாளியின் விவரங்களைக் கொடுக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், செலவு குறித்த எந்த மதிப்பீடும் இல்லை என்றும் தெரிவிக்க வேண்டும். மேலும் பணம் தேவை என விண்ணப்பித்து ஒரு மணி நேரத்தில் பணம் வங்கி கணக்கில் மாற்றம் செய்யப்படும். இது முன்னதாக கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் என தெரிவித்த முன்பணம் போல இல்லாமல், உங்களது கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة