மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு – கணக்கீட்டு விவரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 12، 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு – கணக்கீட்டு விவரம்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வுத் தொகையானது ஜூலை மாதத்தில் 3 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன நிலையில், இத்தொகையானது செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

DA உயர்வு

மத்திய அரசுத் துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட தொகையுடன் கூடுதல் சலுகையாக அகவிலைப்படி, மருத்துவப்படி, பயணப்படி உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அகவிலைப்படி (DA) தொகையானது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவின் படி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு தவணையாக ஒரு ஆண்டுக்கு 2 முறை தரப்படும் இத்தொகையானது உயர்வு அடைந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயரக்கூடும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது 7 வது ஊதியக்குழுவின் கீழ், தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 17% DA கொடுக்கப்படுகிறது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு பகுதியாகும். இந்த அடிப்படையில் கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான DA தவணைகள் திரும்ப கொடுக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை 28 சதவீதமாக உயரும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அதாவது 7 வது ஊதியக்குழுவின் கீழ் 2020 ஜனவரியில் 4% DA, 2020 ஜூன் மாதத்தில் 3% DA மற்றும் 2021 ஜனவரியில் 4% DA அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த DA அளவிடுதலை பொருத்தளவு,


ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் அதிகரித்து வரும் விலைகளுக்கு ஏற்றவாறு DA தொகையானது வருடத்திற்கு இரண்டு முறை கணக்கிடப்பட்டு திருத்தப்படுகிறது. இந்த திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறுகின்றன. முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு, மத்திய அரசு DA தொகையின் கணக்கீடுகளை மாற்றி அமைத்து அதற்கான புதிய பார்முலாவையும் அறிமுகப்படுத்தியது. அதன் கீழ்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA சதவீதம் = {(AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 = 100) கடந்த 12 மாதங்களாக -115.76) /115.76} x 100 என்ற கணக்கிலும்,

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான DA சதவீதம் = {(கடந்த 3 மாதங்களாக ஏஐசிபிஐ சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) -126.33) / 126.33} x 100 ஆகவும் கணக்கிடப்படுகிறது. இந்த உயர்வுகளையும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படும் DA தொகையையும் கருத்தில் கொண்டு, தற்போது DA உயர்வு சுமார் 28% மாக இருக்கும். தவிர அதனுடன் ஜூன் மாதத்துக்கான 3% உயர்வும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி இந்த எண்ணிக்கை 31% மாக அதிகரிக்கும். ஆனால் ஜூன் மாதத்திற்கான தரவு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் குறியீட்டு புள்ளி 0.5 அதிகரித்து தற்போது 120.6 ஆக உள்ளது. ஜூன் மாதத்தை பொருத்தளவு, குறியீட்டு புள்ளி 3 சதவீதத்தை தாண்டும் என்பதால் 130 புள்ளிகள் உயரும் என கூறப்படுகிறது. எனினும் ஜூலை மாதத்திலிருந்து DA உயர்வு கொடுக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة