இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 07، 2021

Comments:0

இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை – மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக அரசு துறைகளில் பணி புரிபவர்களுக்கே சில சிறப்பு சலுகைகளுடன், லட்ச கணக்கில் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் முதல் தமிழக முதல்வர் வரை ஒவ்வொருவர் வாங்கும் சம்பள விவரம் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையுடன், கை நிறைய சம்பளம், அரசு சலுகைகள் உள்ளிட்ட பலவும் கிடைக்கிறது. ஒரு அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கே இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்றால் அரசை நடத்தும் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கும் மரியாதையுடன், அவர்களது மாத வருமானம் எவ்வளவு இருக்கும் என்றே நம்மால் கணிக்க இயலாது. அந்த வகையில் நீங்கள் அறியாத அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் சம்பளம், மற்றும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் தற்போது பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரத்தில் உள்ள முதல் நபர் யார் என்றால் அது ஜனாதிபதி தான். ஒரு மாதத்துக்கு மட்டும் இவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் 5 லட்சம் ரூபாய். இந்த தொகை அவரது சம்பளத்தில் கொடுக்கப்படும் முதன்மை தொகையாகும். இது தவிர ஜனாதிபதிக்கு இன்னும் பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த சம்பள பட்டியலில் 2 ஆவதாக இணைந்திருப்பவர் நம் நாட்டின் துணை ஜனாதிபதி. இவருக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

இதுவே ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆளுனர்களுக்கு 3.50 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக நம் நாட்டின் முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவர் என்றால், அது பிரதமர் தான். அதன் படி பிரதமருக்கு கொடுக்கப்படும் மாத சம்பளம் 2.80 லட்சம் ரூபாயாகும். மற்றொரு பக்கத்தில் காண்கையில் பிரதமர் பதவியில் இருந்து பதவி காலம் முடிந்த ஒருவர், அவரது வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு இலவச இடம் கொடுக்கப்படுகிறது. இதோடு பிரதமருக்கு என இலவச மருத்துவ செலவுகளுடன் 14 அலுவலக பணியாளர்கள் கொடுக்கப்படுவார்கள். இது தவிர 6 எக்ஸ்க்யூட்டிவ் வகுப்பு விமான டிக்கெட்டுகள், பதவியில் இருந்து விலகிய பிறகு முதல் 5 ஆண்டுகளுக்கு இலவச ரயில் டிக்கெட்டுகள் உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இது தவிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மாதந்தோறும் 2,80 லட்சம் ரூபாயும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவருக்கும் 2.50 லட்சம் ரூபாயும், தலைமை தேர்தல் ஆணையருக்கு 2.50 லட்சம் ரூபாயும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு 2,50 லட்சம் ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. தவிர இவர்களுக்கு மருத்துவ செலவுகள், இருப்பிடம், போக்குவரத்து என அனைத்துக்கும் சிறப்பு சலுகை கொடுக்கப்படுகிறது. இறுதியாக தமிழக முதல்வருக்கு சம்பளம் 2.20 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதில் உத்தர பிரதேச முதல்வருக்கு அதிகபட்சமாக 3.65 லட்சம் ரூபாயும், மஹாராஷ்டிரா முதல்வருக்கு 3.40 லட்சம் ரூபாயும், ஆந்திர பிரதேச முதல்வருக்கு 3.35 லட்சம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. இவற்றில் மிக குறைந்த வருமானத்தை தெலுங்கானா, பெங்கால், நாகலாந்து உள்ளிட்ட மாநில முதல்வர்கள், 1.10 லட்சம் ரூபாயாக பெற்று கொள்கின்றனர். இது தவிர இந்த அரசு அதிகாரிகளுக்கு மேலும் பல சலுகைகள் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة