அனைத்து புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து மருத்துவர்களின் சேவை கட்டணம் கிடையாது: ஜெம் மருத்துவமனை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 04، 2021

Comments:0

அனைத்து புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து மருத்துவர்களின் சேவை கட்டணம் கிடையாது: ஜெம் மருத்துவமனை அறிவிப்பு

புற்றுநோய்க்கான அனைத்துசிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஆலோசனைகளுக்கு இந்தஜூலை மாதம் முழுவதும் தங்களது கட்டணத்தை பெறப்போவதுஇல்லை என்று ஜெம் மருத்துவமனை மருத்துவர்களுடன் டாக்டர் சி.பழனிவேலுவின் நுண்துளை புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம், ஜெம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தேசியமருத்துவர் தினத்தில் அறிவித்துள்ளன. இதுகுறித்து ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறியதாவது: கரோனா காலத்தில் நிலவிவரும் நிதி நெருக்கடியால், உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் பல புற்றுநோயாளிகள் வேறு வழி தெரியாமல் தங்கள் சிகிச்சையை தள்ளிவைக்கின்றனர். அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கஜெம் மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது. ‘ஜீரோ மருத்துவக் கட்டணம்’ என்ற முன் முயற்சியின் காரணம் இதுதான்.

தேசிய மருத்துவர் தினமான 2021 ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை இந்த பணி நடைபெறும். இந்த முயற்சிக்கு உதவி செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் முழு மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியத்தை ஜெம் மருத்துவமனை எப்போதும் வலியுறுத்துகிறது. அறிகுறிகள், குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆரம்பகால புற்றுநோய்கள்
குணப்படுத்தக்கூடியவை. எனவே, காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம். புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள 9043894921 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றுஜெம் மருத்துவமனை அறிவித்துள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة