தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள் உயர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இடையில் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பிறகு கொரோனா 2ம் அலை வேகமெடுக்கத் தொடங்கியதால் மீண்டும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அகமதிப்பீட்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளையும் எழுதுகின்றனர். ஒவ்வொரு கல்லூரிகளும் தங்களின் மாணவர்களுக்கு கால அட்டவணையை தயார் செய்து தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வரும் ஜூலை 31ல் வெளிவர இருப்பதால் அனைத்து கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தவிட்டுள்ளார். இந்த நிலையில் 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இதனால் வேலை நாட்கள் குறையும் என தனியார் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர். கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு 90 வேலை நாட்கள் கட்டாயம் தேவை. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களின் கல்விநிலை கருதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வி துறை அனுமதி வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் இணைப்பு கல்லூரி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி பேராசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.