ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் பெறும் வழிமுறைகள் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 23, 2021

Comments:0

ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ் பெறும் வழிமுறைகள் இதோ!

தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் சாதியை உறுதிப்படுத்தும் ஓபிசி சான்றிதழை ஆன்லைன் மூலம் எளிதாக பெறும் முறைகளை இப்பதிவில் காண்போம். ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறுவதற்கு கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

ஓபிசி சான்றிதழ்:
தமிழகத்தில் பின்தங்கிய பிரிவு மக்களுக்கு அரசு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் போது தாழ்த்தப்பட்ட பிரிவினர் தனது சாதி சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்கும் போது முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. அதன்படி பின்தங்கிய வகுப்பு குடிமக்களுக்கு மாநில அரசு தனது சாதியை உறுதிப்படுத்தும் வகையில் ஓபிசி என்றும் அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்குகிறது. கல்வி நிறுவனங்கள் சேர்க்கையின் போதும் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் இந்த ஓபிசி சான்றிதழ் பயன்படுகிறது. இந்த சான்றிதழை ஆன்லைன் மூலம் எளிதாக பெறலாம். ஓபிசி சான்றிதழ் பெற ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம், சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

ஆன்லைன் மூலம் ஓபிசி சான்றிதழ்: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் Citizen Login என்பதை கிளிக் செய்து கீழேயுள்ள New User Option னில் உங்களின் விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிட்டு அந்த எண்ணிற்கு ஒடிபி அனுப்ப வேண்டும். உங்கள் எண்ணிற்கு வரும் ஒடிபியை பதிவிட்டு பிறகு புதிய முகப்பு உருவாகும். அதில் Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஓபிசி சான்றிதழ் என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவை முடிவடைந்தவுடன் CAN Registration Number உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும். அதை பதிவிட வேண்டும்.

பிறகு உங்களின் புகைப்படம், கையொப்பம், ஆவணங்கள் முதலியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓபிசி சான்றிதழ் பெற கட்டணமாக ஆன்லைன் மூலம் 60 ரூபாய் செலுத்த வேண்டும்.

அனைத்து படிநிலைகளையும் முடித்த பிறகு TNeGA Login செய்து உங்கள் ஓபிசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews