தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி முதலில் போக்குவரத்து கழக நிர்வாகிகள் தனது முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2003ம் ஆண்டு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதில் அரசு ஊழியர்களின் பணி நிறைவிற்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கிடையாது போன்ற பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. அவர்களின் பணி காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மட்டுமே பணி நிறைவுக்கு பிறகு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோர் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார். அதன்படி மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தார். இந்த குழு தனது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முடிவுகளை வைத்து அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி முதலில் போக்குவரத்து கழக நிர்வாகிகளின் கருத்தை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வூதிய திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.