ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சி - எடப்பாடி பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 22، 2021

Comments:0

ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சி - எடப்பாடி பழனிசாமி

எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது - ஒ.பன்னீர்செல்வம் பேட்டி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருவதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் பேசியதாவது,
எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க அதிமுக தயாராக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது.
திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சிக்கின்றனர் என்றார். ஜெயலலிதா பெயரில் பல்கலை கழகம் அமைக்கப்பட்டதால், அதை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கின்றனர்; இது கண்டனத்திற்குரியது.
ஜெயலலிதா பல்கலை. இயங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்க முயற்சிக்கின்றனர்.
புதிதாக மதுரையில் ஆரம்பிக்கும் நூலகத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஆனால், ஏற்கனவே துவங்கப்பட்ட பல்கலைகழகத்தை நிதி இல்லை என வேறு பல்கலைகழகத்துடன் இணைப்பது சரியா?
நூலகம் அமைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?

- எடப்பாடி பழனிசாமி.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة