தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் மீண்டும் கல்லூரிகளை திறக்க, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின்னர் மே மாதம் முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட தனியாக முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களும், பணியாளர்களும் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து நீதிமன்ற விசாரணையில் அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.