இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி, இருப்பிடம், வருமானம், அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி, இருப்பிடம், வருமானம், அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

இனி உங்க ஸ்மார்ட்போனிலேயே சாதி, இருப்பிடம், வருமானம், அடங்கல் சான்றிதழ்கள் எல்லாம் பெற முடியும்! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், OBC சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வேலையில்லா பட்டதாரி சான்றுதழ், விதவை சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், விவசாயத்திற்கான அடங்கல் ஆகியவற்றை எல்லாம் நீங்கள் இனி உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே விண்ணப்பத்து பெற முடியும்.

உங்களுக்குத் தேவையான அரசு சான்றிதழ்களை பெற இனி VAO அலுவலகங்களுக்கோ, தாலுகா அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து சான்றிதழ்களுக்கும் இப்போது உங்கள் மொபைல் போனிலேயே விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# எனும் வலைத்ததிற்குச் சென்று முதலில் New User என்பதை கிளிக் செய்து Register செய்து கொள்ள வேண்டும்.

● Register செய்யும் போது உங்களுடைய முழு பெயர், முகவரி, தாலுக்கா, மாவட்டம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், Login ID, password ஆகியவற்றை சரியாக உள்ளிட வேண்டும். அடுத்து திரையில் Captcha குறியீட்டை உள்ளிட்டு Sign Up பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும்.

● இப்போது நீங்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு OTP ஒன்று வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு சரிபார்த்ததும் உங்களுக்கான கணக்கு திறக்கப்படும். ● இப்போது https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx# வலைத்தளத்திற்குச் சென்று நீங்கள் உருவாக்கிய Username, Password, Captcha code ஆகியவற்றை கொண்டு Login செய்து கொள்ள வேண்டும்.

● Login ஆனதும், Department Wise எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். ● அதில் Revenue Department எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் வருவாய் துறை மூலம் கிடைக்கும் சேவைகளின் பட்டியலைக் காணலாம்.

● அவற்றில் உங்களுக்கு தேவையான சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

● எடுத்துக்காட்டாக உங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டுமென்றால் Community Certificate என்பதை கிளிக் செய்கிறீர்கள் என்றால், புதிதாக ஒரு பக்கம் திறக்கும். ● அதில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், சேவை விவரம் மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்கள் இருக்கும்.

● அதை படித்துவிட்டு, Proceed எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

● இப்போது CAN நம்பர் என்று சொல்லக்கூடிய குடிமக்கள் கணக்கு எண் தேவைப்படும். உங்களிடம் இல்லை என்றால் Register CAN என்பதை கிளிக் செய்து புதிய CAN எண்ணைப் பெற்றுக்கொள்ள முடியும்.

● CAN எண்ணுக்கு விண்ணப்பிக்க உங்களிடம் விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை உடன் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, PAN கார்டு போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.

● விண்ணப்பத்தாரரின் விவரங்களைப் பூர்த்திச் செய்துவிட்டு, அடுத்து அடுத்து தற்போதைய முகவரி, நிலையான முகவரி, வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை உள்ளிட வேண்டும். ● அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து CAN எண்ணை பெற்றதும் CAN எண்ணை உள்ளிட்டு தேடுதலை தொடங்கி உங்களுக்கான விண்ணப்பத்தை தொடங்கலாம்.

● நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்குத் தேவையான ஆவணங்களான Photo ID proof, address proof, பிறப்பு சான்றிதழ், self declaration ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.

● பதிவேற்றியதும், Make Payment எனும் விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.60/- கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற வழிகளைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும்.

● இப்படி நீங்கள் விண்ணப்பித்து முடித்ததும் ஓரிரு நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழைப் பெற முடியும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews