தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து நாளை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிக்கும் என நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம்: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து மக்களும் தங்களின் வேலைகளை இழந்து அன்றாட உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்தும் படி மாணவர்களின் பெற்றோர்களை வற்புறுத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத இந்த ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கேட்பது பெரும் சுமையாக உள்ளது என கவலை அடைந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீதும், கட்டணத்தை உடனடியாக செலுத்த சொல்லும் பள்ளி நிர்வாகம் மீதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்தார். மேலும் கடந்தாண்டு, திறக்கும் வரை தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும் இந்த 75% கட்டணத்தை 40% 35% என இரு தவணைகளாக நிர்வாகங்கள் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தது. மேலும் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பாக பல்வேறு குழப்பங்களும் கோரிக்கைகளும் உள்ளது. அதனால் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் தனியார் பள்ளிகள் கட்டணம் குறித்து நாளை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.