மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விஞ்சிய மாநகராட்சி பள்ளிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகளை விஞ்சிய மாநகராட்சி பள்ளிகள்!

மாநகராட்சி பள்ளிகளுக்கு மவுசு கூடுது! 7,008 மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், இதுவரை, 7,008 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.கோவை மாநகராட்சி சார்பில், 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளி, 42 ஆரம்ப பள்ளிகள், ஒரு காதுகேளாதோர் பள்ளி, நடத்தப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. வழக்கமாக, மாநகராட்சி பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்திருந்தது. 2018-19ம் கல்வியாண்டில், புதிதாக, 7,351 மாணவர்கள் சேர்ந்த போதிலும், ஒட்டுமொத்தமாக, 20 ஆயிரத்து, 984 மாணவர்களே படித்தனர். கடந்த கல்வியாண்டுகளை காட்டிலும், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. விரைவில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதனால், மாநகராட்சி பள்ளிகளில், 2021-22 கல்வியாண்டுக்கு, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில், 2,220, நடுநிலைப்பள்ளிகளில், 1,011, உயர்நிலைப்பள்ளிகளில், 570, மேல்நிலைப்பள்ளில், 3,207 என, மொத்தம், 7,008 மாணவ, மாணவியர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இதுவரை, 23 ஆயிரத்து, 400 மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.வழக்கமாக, செப்., 30 வரை மாணவர் சேர்க்கப்படுவர் என்பதால், எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும் என, மாநகராட்சி ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.அவர்கள் மேலும் கூறுகையில், 'கோட்டைமேடு பள்ளியில் 520, கணபதி - 236, ரத்தினபுரியில், 190 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளியில் இருந்து, மாநகராட்சி பள்ளிக்கு, 2,000 மாணவர்கள் மாறியுள்ளனர். பள்ளியில் சேரும் நாளன்றே, பாடப்புத்தகங்கள் மற்றும் மதிய உணவுக்கான பொருட்கள் வழங்குகிறோம்.ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொபைல் போன் வாங்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு, மாலை 6:00 முதல் இரவு, 7:30 மணி வரை, ஆன்-லைனில் மாலை நேர வகுப்பு நடத்தப்படுகிறது.மசக்காளிபாளையம் பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இருப்பினும், எம்.எல்.ஏ.,க்களின் பரிந்துரை கடிதத்துடன் பலரும், மாநகராட்சி பள்ளியை நோக்கி வருகின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews