மாநிலங்களின் மீது மொழி திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!
இன்றைய மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எந்த மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது என்று அறிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடர்:
நடப்பாண்டில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு முன்னதாகவே, மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக புதிதாக பதவி ஏற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களை பற்றியும், எதிர்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எதிர்க்கட்சியினர் பலத்த கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை குறித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய புதிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், நாட்டின் எந்த மாநிலத்தின் மீதும் மொழி திணிப்பு இருக்காது. மும்மொழி கொள்கை குறித்து மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமே இறுதியானது என்று எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.