அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، يوليو 04، 2021

Comments:0

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். கொரோனா காரணமாக 2020 ஜன., 1 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் வரை, மூன்று தவணை அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 'ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும்; ஓய்வூதியர் விதிமுறைகள் தளர்த்தப்படும்' என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதனால், நடப்பு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என, மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்களும், 60 லட்சம் ஓய்வூதியர்களும் எதிர்பார்த்தனர். இது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், மத்திய அரசு அறிவிப்பில் உள்ள முக்கிய ஐந்து அம்சங்கள் குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:

* ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக உயர்த்தப்படலாம். இது குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்

* மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வசதி கடன் திட்டம், 2020 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்படலாம். இந்த திட்டத்தில், 7.9 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விதிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது * கடந்த ஜூன் 15 முதல், ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் பயணப் படி கோரிக்கைக்கான கால வரம்பு, 60 நாட்களில் இருந்து, 180 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது

* ஓய்வூதியம் குறித்த விபரங்கள் அனைத்தையும் ஓய்வூதியதாரருக்கு மின்னஞ்சல், குறுந்தகவல், 'வாட்ஸ் ஆப்' ஆகியவற்றில் அனுப்ப, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநடைமுறை, 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது

* குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர் இறந்தால், இறப்பு சான்றிதழுடன்விண்ணப்பிக்கும் குடும்ப வாரிசுக்கு, உடனடியாக பகுதி ஓய்வூதியம்வழங்கப்படும்

* உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்த பின், குடும்ப ஓய்வூதியம் நிலுவையுடன் முழுதுமாக வழங்கப்படும். இதனால், வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகள் முடியும் வரை ஓய்வூதியம் பெற முடியாத நிலை தவிர்க்கப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة