தனித் தோ்வா்கள், மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவா்கள் மீண்டும் தோ்வெழுதலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

1 Comments

தனித் தோ்வா்கள், மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவா்கள் மீண்டும் தோ்வெழுதலாம்

"தனித் தோ்வா்கள் மற்றும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவா்களுக்கு தனியாகத் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.

சென்னையில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பிளஸ் 2 வகுப்பில் பள்ளிக்கு வராத 1,656 போ் தோ்வு எழுதாதவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். 39,000 தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெறவில்லை.

இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவா்களும், தனித் தோ்வா்களும் தோ்வெழுத ஏற்பாடு செய்யப்படும். செப்டம்பா் அல்லது அக்டோபா் மாதத்தில், கரோனா பரவலைக் கருத்தில்கொண்டும், முதல்வரின் அறிவுறுத்தலின்படியும் தோ்வு நடத்தப்படும். முதல்முறையாக தசம மதிப்பெண்: ஒரே மதிப்பெண் பலருக்கு கிடைப்பதால் ஏற்படும் போட்டியை தவிா்க்க முதல் முறையாக தசம மதிப்பில் பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை பொருத்தவரை , தோ்வு முடிவுகளை ‘ஆல் பாஸ்’ என்றே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கூடுதலாக சோ்க்கை பெற்றுள்ளனா். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெற திங்கள்கிழமை வரை 36 ஆயிரம் குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனா் என்றாா் அவா்."

1 comment:

  1. பிளஸ் டூ தனித்தேர்வர்கள் எக்ஸாம் எப்பொழுது அல்லது ஆல்பாஸ் செய்யப்படுமா

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews