கல்வி தொலைக்காட்சி பார்வையிட முடியாத மாணவர்கள் - விவரம் திரட்டும் கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

கல்வி தொலைக்காட்சி பார்வையிட முடியாத மாணவர்கள் - விவரம் திரட்டும் கல்வித்துறை

கல்வி தொலைக்காட்சி பார்வையிட முடியாத மாணவர்கள் எவ்வளவு? பட்டியல் திரட்டுகிறது பள்ளிக்கல்வித்துறை வீடுகளில் தொலைக்காட்சி இன்றி, கல்வி சேனல் பார்க்க முடியாத மாணவர்களின் பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்க முடியாத நிலை தொடர்கிறது. தொற்று பரவுவது குறைந்தாலும், மூன்றாவது அலை விரைவில் வரவுள்ளதாக தகவல் வெளியாவதால், குழந்தைகளை பள்ளிக்கு வரவழைப்பதில் சிக்கல் உள்ளது.

இதனால், கடந்த கல்வியாண்டு முழுக்க, மாணவர்கள் வீட்டிலிருந்து படித்ததில் உள்ள தடைகளை கண்டறிந்து, சில தீர்வுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, சிலபஸ் குறைப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க, ஸ்மார்ட் போன் இல்லாதோர் மற்றும் கல்வி சேனல் பார்க்க தொலைக்காட்சி வீட்டில் இல்லாதோர், பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில், 'டேப்லெட்' வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பள்ளி வாரியாக பட்டியல் திரட்டும் பணிகள் நடக்கின்றன.வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'கடந்த கல்வியாண்டு முழுக்க, ஸ்மார்ட் போன் இன்றி, ஆசிரியர்கள் அனுப்பும் வீடியோவை காண முடியாதோர், பட்டியல் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளது. தற்போது தொலைக்காட்சி இல்லாதோர் விபரம், அந்தந்த பள்ளிகள் மூலம் திரட்டப்பட்டு வருகிறது. மலைகிராமம், குக்கிராமங்களில் வசிக்கும் சொற்ப மாணவர்களே இப்பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்கள் கல்வி பெற, மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews