நுகர்வோர் வாணிபக் கழகத்தில் அரிசி அரைவை ஆலை முகவராக விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يوليو 27، 2021

Comments:0

நுகர்வோர் வாணிபக் கழகத்தில் அரிசி அரைவை ஆலை முகவராக விண்ணப்பிக்கலாம்

நுகர்வோர் வாணிபக் கழகத்தில் அரிசி அரைவை ஆலை முகவராக விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், ஜூலை 26: தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத் தில் புழுங்கல் அரிசி ஆலை முகவராக நியமனம் செய்ய விண் ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்மு தல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள், அரைவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரைவை செய்து பொது விநியோகத் திட்டத் துக்கு வழங்க ஏதுவாக நெல் சுத்தம் செய்யும் இயந்திரம், இயந் திர உலர்த்தி, நவீன அவியல் முறை, கோண் பாலிசர், ஓயிட்னஸ் கருப்பு அரிசி நீக்கும் இயந்திரம், சேமிப்புக் கிடங்கு வசதி உள் ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் அரைவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரைவை முகவ ராக நியமனம் செய்ய விண்ணப்பிக்கலாம். இதை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு, மண்டல மேலாளர், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவள்ளூர் மண்டலம் எண்.46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் என்ற முகவரியிலும், 9444662984, 044-27662417, 044-27664016 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة