தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர விரும்புவோர், சனிக்கிழமை முதல் விண் ணப்பிக்கலாம் என பல்கலைக் கழக பதிவாளர் வி.கோபிநாத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை வண் டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள தமிழ் நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பு, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என 18 வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இவற்றில்சேர விரும்புவோர், www.tnpesu.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அத்து டன் விண்ணப்பதாரர்களின் கல்விச் சான்றுக ளும் இணைக்கப்பட வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு, www.tnpesu.org என்ற இணையத ளத்தையோ, regtnpesu@gmail.com என்ற மின் னஞ்சல் முகவரியையோ, 044 2747 7906 என்ற தொலைபேசி எண்ணையோ அணுகலாம்.
விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.22-ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.