தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் மற்றும் புத்தாக்க இயக்கம் என்ற அமைப்பு, மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. தொழிலின் தொடக்க நிலைக்குத் தேவையான ஆதார நிதி உதவி அளிப்பது அந்த அமைப்பின் நோக்கமாகும். இந்த அமைப்பின் மூலமாக நம்பிக்கைக்குரிய 10 புதிய தொழில் நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மேலும் 10 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ஆதார நிதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அளிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற இணையதளத்தை பாா்வையிடலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கு வினாக்களை அனுப்பி தெளிவு பெறலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது."
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.