"ஆன்லைன் வகுப்பு..’" கண்ணைக் காப்போம்.. காது கொடுத்துக் கேட்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

"ஆன்லைன் வகுப்பு..’" கண்ணைக் காப்போம்.. காது கொடுத்துக் கேட்போம்!

"ஆன்லைன் வகுப்பு..’" கண்ணைக் காப்போம்.. காது கொடுத்துக் கேட்போம்!


*இளம் பருவத்தினர் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களுடைய செவி மற்றும் பார்வைத் திறன் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், எச்சரிக்கையோடு உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர்.*

*கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.* *தொடர்ந்து மொபைல் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக சிறிய திரையில் படித்து வரும் மாணவர்களின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் உரிய வழிமுறைகளை முறையாக கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*

*மொபைல் போன்ற சிறிய திரையில் இளம் பருவத்தினர் அதிக நேரம் பார்க்கும் போது அவற்றில் இருந்து வெளியாகும் ப்ளூ லைட் குழந்தைகளின் விழித்திரையை நேரடியாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவற்றை தவிர்ப்பதற்காக முடிந்தவரையில் கைபேசியை ஸ்மார்ட் டிவி யுடன் இணைத்து பங்கேற்க வைக்கலாம் என்றும், அல்லது, லேப்டாப் போன்ற பெரிய திரையாக இருந்தால் நல்லது என்றும் மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.*

*குழந்தைகள் கண்ணை சிமிட்டாமல் தொடர்ந்து திரையை பாதிப்பதால் அவர்களுடைய பார்வைத்திறன் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.* *அதேபோல குழந்தைகள் அதிக நேரம் Earphone பயன்படுத்துவதால் ஒற்றைத் தலைவலி, காதுகளில் இரைச்சல், காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறும் மருத்துவர்கள், தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தத்துடன் செல்போன்களைப் பயன்படுத்தினால் காது நரம்புகள் பலவீனமடைந்து கேட்கும் திறன் நாளடைவில் குறையும் என்றும் எச்சரிக்கின்றனர்.*

*இயர்போன்களை காதில் அழுத்தி வைப்பதால் காற்று உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, காதில் பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.*

*காதில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க 60% வரை ஒலித் திறனை பயன்படுத்தலாம் எனவும், தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு மேல் இயர்போன்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.*

*இயர்போன்களுக்கு பதிலாக பெரிய அளவிலான ஹெட்போன்களை பயன்படுத்தலாம் எனவும், அவை நல்ல தரமானவையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.*

*கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை என்றாலும், வளரும் இளம் தலைமுறையினரின் கண்கள், செவிகள் ஆகியவை மென்மையாக இருக்கும் என்பதனால், பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு அவற்றை கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.* *மேலும், குழந்தைகளின் பார்வைத் திறன் மற்றும் செவித்திறனில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பது போல் தெரிந்தால் தாமதிக்காமல் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதுதவிர தமிழ்நாடு அரசு வகுத்துள்ள கால அளவின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை எடுத்தாலே பாதிப் பிரச்சனை குறைந்துவிடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews