கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய 9-ம் வகுப்பு படிக்கும் மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய 9-ம் வகுப்பு படிக்கும் மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கையடக்க கணினியை செயலாக்க கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி எஸ்.எஸ்.மாதவை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டினார். 9-ம் வகுப்பு படிக்கும் மாதவ் மினி CPU தயாரித்து ஆன்லைன் மூலம் விற்கும் தகவலையறிந்து பாராட்டினார். திருவாரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேதுராசன். இவர் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் தட்டச்சராக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சுதா. இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் மாதவ் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டாம் மகன் கிரித்திக் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சேதுராசன் தூத்துக்குடியில் தங்கி பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவியும் இரண்டு மகன்களும் சேதுராசனின் தந்தையோடு திருவாரூர் அடுத்த மருதப்பட்டினம் வீட்டில் வசித்து வருகின்றனர்.சிறுவயது முதலே கணினி மீது தீவிர ஆர்வம் கொண்டவராக சேதுராசனின் முதல் மகன் மாதவ் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் மாதவிற்க்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர். திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் மாதவ் படித்து வருகிறார். தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாதவ் கடந்தாண்டு ஊரடங்கு காரணமாக ஏழாம் வகுப்பிலிருந்து வீட்டிலேயே இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் போது நேரத்தை வீணாக்காமல் ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ், பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார். அதே நேரத்தில் கணினியை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்க கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (CPU) என்ற கருவியை கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கான முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதவ் ஈடுபட்டு வந்த நிலையில், தானே அந்தக் கருவியை வடிவம் செய்து அதனை பல்வேறு தனியார் கணினி செயலாக்க கருவியை செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்து அதற்கான மதர்போர்டு என்று அழைக்கக்கூடிய முக்கிய பாகங்களை மும்பையிலிருந்து வரவழைத்து இவரே வடிவமைத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews