ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், இன்று முதல் நோய்தடுப்பு நெறிமுறைகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று பாதிப்பு ஹரியானா மாநிலத்தில் குறைந்துள்ளதை தொடர்ந்து ஜூலை 16ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாநில முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூலை 23ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணாவர்களுக்கு பள்ளிகள் தொடங்குவது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் இது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் நோய்த்தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, முகக்கவசம், சானிடைசர்கள் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சர் கன்வர் பால், மாநிலத்தில் பள்ளிகளை திறந்த போதிலும், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது முற்றிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பங்களை பொறுத்தது என்றும், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு வழக்கம் போல் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் கூறினார். மேலும், வருகை பதிவு அவசியமாக இருக்காது என்றும் கூறினார். மேலும், தொற்று பாதிப்புகள் மோசமடைந்து வரும் நிலையில், பள்ளிகள் உடனடியாக மூடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.