தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு உதவித்தொகை:
தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறை பதிவு செய்த பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தல் அவசியம். ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் சென்று மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதியாலம் மற்றும் புதுப்பிப்பு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் தமது கல்வித் தகுதியை பதிவிடுவது அவசியம்.

தமிழகத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அரசு பணியாளர் தேர்வு மையம் மூலம் தேர்வுகள் நடத்தி அரசு பணிகள் வழங்கப்படுவதால், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களுக்கு அதிகளவில் பணிகள் கிடைப்பதில்லை. இதனால் இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காக அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000த்திற்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பதிவுதாரர்களுக்கு மாதம் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300 ரூபாயும் மாதந்தோறும் வழங்கப்படும். மேலும் 12ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு ஆகிய பிரிவுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு 400 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும் உதவித்தொகையாக மாதந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews