ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 வரை IFSC குறியீடு செல்லும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 05, 2021

Comments:0

ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 வரை IFSC குறியீடு செல்லும்!

நிதிச் சுமை காரணமாக ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கியானது கடந்த வருடம் யூனியன் வங்கியுடன் இணைந்தது. இந்நிலையில் ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு IFSC குறியீடு குறித்த முக்கிய அறிக்கையை யூனியன் வங்கி வெளியிட்டுள்ளது.

ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி:

நாட்டில் தற்போது பல தனியார் வங்கிகள் நிதி நெருக்கடி காரணமாக இதர வங்கிகளுடன் இணைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் தனியார் வங்கிகளான ஆந்திர மற்றும் காப்பரேஷன் ஆகிய இரண்டு வங்கிகள் யூனியன் வங்கியுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சேவைகளில் மாற்றம் ஏற்படும் என்று யூனியன் வங்கி தெரிவித்தது. அதன்படி ஆந்திர மற்றும் காப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு எண்ணில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் காசோலை மற்றும் IFSC குறியீடு மாறுபடும் என்றும் யூனியன் வங்கி தெரிவித்தது. அந்த வகையில் புதிய காலோசைகளை வங்கி மூலம் பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மற்றும் காப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு IFSC குறியீடு குறித்து யூனியன் வங்கி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆந்திர மற்றும் காப்பரேஷன் ஆகிய இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பழைய காசோலை, IFSC குறியீடுகளையும் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் புதிய வங்கியின் IFSC குறியீடை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews