தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – ஜூலை 28 கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – ஜூலை 28 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 19 முதல் ஐடிஐ மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதனை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியது.அதன் காரணமாக மே மாதம் முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதன் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50 சதவிகித மாணவர்களுடன் ஜூலை 19 ஆம் தேதி முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம்-1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மாணவர்கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏப்ரல் 2021-ல் தேர்ச்சி அடைந்த 10-ம் வகுப்பு மாணவர்கள், 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை இணைக்கவேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இந்த மாணவர் சேர்க்கை கட்டணமாக ருபாய் ரூ.50 செலுத்த வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் மூலமாக கூட செலுத்தலாம். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews