தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.25 கோடி ஒதுக்கீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.25 கோடி ஒதுக்கீடு!

தமிழக அரசு அலுவலங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னதாக ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பல அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்ப நல நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஓய்வூதிய திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் திடீரென மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் செயல்படுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 13,746 ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்க ரூ.57.34 கோடி நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முதற்கட்டமாக ரூ.25 கோடி நிதியை அரசு விடுவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களின் பங்களிப்பை ரூ.80 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தியும் அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews