தமிழகத்தில் இரண்டாமாண்டு டிப்ளமோ சேர்க்கை அட்மிஷன் அறிவிப்பு 2021 - TNDTE Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يوليو 19، 2021

Comments:0

தமிழகத்தில் இரண்டாமாண்டு டிப்ளமோ சேர்க்கை அட்மிஷன் அறிவிப்பு 2021 - TNDTE Official Notification PDF

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ பட்டயபடிப்பிற்கு விண்ணப்பிக்க தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனோடு சேர்த்து செயற்கை ஆய்வகங்கள் மற்றும் முடநீக்கியியல், ஒப்பனைக் கலை ஆகியவற்றில் சேருவதற்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணையப்பக்கத்தில் பதிவிட்டு உள்ளோம். அவற்றின் மூலம் அட்மிஷனிற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இரண்டாமாண்டு டிப்ளமோ கல்வித்தகுதி :
மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், Physics/ Mathematics / Chemistry/ Computer Science/ Electronics/ Information Technology/ Biology/ Informatics Practices/ Biotechnology/ Technical Vocational subject/ Agriculture/ Engineering Graphics/ Business Studies/ Entrepreneurship பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்றில் பயின்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்திருக்க வேண்டும். செயற்கை ஆய்வகங்கள் மற்றும் முடநீக்கியியல் கல்வித்தகுதி :
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி அல்லது தொழில் பிரிவில் இயந்திரங்களை செயல்வடுத்துபவர் பயின்றிருக்க வேண்டும்.
ஒப்பனைக் கலை கல்வித்தகுதி :
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி மற்றும் அதற்குச் சமமான படிப்பு முடித்திருக்க வேண்டும். பதிவு கட்டணம் :
மாணவர்கள் அனைவரும் பதிவு கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.07.2021 அன்று முதல் 05.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNDTE Official Notification PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة