கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சட்டிஸ்கர் மாநில அரசு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது கடைசி ஆயுதம் தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த நிலையில், பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப மாநில வாரியாக பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்ததால், அதனை செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்தது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. தினசரி 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது 40 ஆயிரமாக குறைந்து உள்ளது. இதனையடுத்து அமலில் உள்ள ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 3வது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சட்டிஸ்கர் மாநில அரசு பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2 முதல் 50 சதவீதம் வருகையுடன் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாற்று நாட்களில் மாணவர்கள் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள், அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் முன்பைப் போலவே தொடரும், நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமில்லை.
ஆகஸ்ட் 2 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்துறை பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ) தொடங்கப்படும், அதே நேரத்தில் மருத்துவ, பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டம் வாரியாக மீண்டும் திறக்கப்படும். மேலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரின் அனுமதி தேவைப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.