வாகன ஓட்டிகளே வரும் 1-ம் தேதி முதல் இது கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 14، 2021

Comments:0

வாகன ஓட்டிகளே வரும் 1-ம் தேதி முதல் இது கட்டாயம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் :

சாலைகளில் செல்லும்போது சாலை விதிகளை பின்பற்றுவது கட்டாயம் ஆகும். இல்லையெனில் விபத்துகளை சந்திக்க நேரிடும். சாலையில் நடந்து செல்பவர்களுக்கு, வாகனங்களில் செல்பவர்களுக்கும் விதிமுறை உள்ளது. சாலையை கடப்பவர் வெள்ளை நிற கோட்டில் தான் கடக்க வேண்டும், வாகனங்களில் செல்பவர்கள் சாலை குறியீடுகளை கவனித்து வாகனத்தை இயக்க வேண்டும், சாலை விளக்குகளை கவனித்து செல்ல வேண்டும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் போன்ற ஏராளமான விதிமுறைகள் உள்ளது. இவற்றை முறையாக பின்பற்றினால் பாதுகாப்பான சாலை பயணத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலை கவசம் அணிய வேண்டும். இது வாகன ஓட்டிகளின் உயிர் கவசமாக திகழ்கிறது. பெரும்பாலானோர் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிவது இல்லை. அதிகமாக இறப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து துறை காவலர்கள் பல முறை கூறினாலும் மக்கள் அதை பொருட்படுத்துவது இல்லை. தலை கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்த்துறை கடும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் என இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், காவல்துறை மற்றும் இதர அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி ஆஷிஷ் ராவத் எச்சரித்துள்ளார். நடப்பாண்டில் நீலகிரியில் இதுவரை 26 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة