மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WhatsApp வழி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يونيو 24، 2021

1 Comments

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WhatsApp வழி தகவல்

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வங்கிகளில் கொடுக்கப்படும் மாத ஓய்வூதிய சீட்டுகளை இப்போது SMS மற்றும் WhatsApp மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஓய்வூதிய சீட்டு
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதிய சீட்டுகளை SMS மற்றும் WhatsApp வழியாக வழங்குவதற்கு வங்கிகளில் முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் SMS மற்றும் WhatsApp வழியாக அனுப்பி வைக்கப்படும் சீட்டுகளில், வரவு வைக்கப்பட்ட தொகை மற்றும் வரி விலக்குகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்களின் மொபைல் எண்கள் வங்கி கணக்குகளுடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதியத்துறை மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் உத்தரவு படி, கையொப்பமிடப்பட்ட அனைத்து ஓய்வூதிய விநியோக வங்கிகளும், ஓய்வூதியதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் வழியாக ஓய்வூதிய சீட்டுகளை SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் வழங்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. கூடுதலாக ஓய்வூதிய விநியோக வங்கிகள் சமூக ஊடக பயன்பாடுகளான வாட்ஸ் அப் போன்றவற்றையும் இதற்காக பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியாளர்கள், தங்களது பொது குறைகளை அலுவலக குறிப்பில் குறிப்பிட்டிருந்தது. அதாவது ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் CCP, ஓய்வூதியதாரர்களுக்கு எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, மேற்கண்ட வழிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை வரவேற்ற வங்கிகள் ஓய்வூதியதாரர்களுக்கான தகவல்களை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

هناك تعليق واحد:

  1. ஓய்வூதியர்கள் தங்கள் பாஸ் புக்கில் வங்கி களில் மாதந்தோறும் வரவு பற்று விவரம் பதிவு செய்ய அலைக்கழிக்கப் படுகின்றனர்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة