Jio மலிவு விலை ஸ்மார்ட்போன் செப்.10 முதல் விற்பனை – சிறப்பம்சங்கள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 25، 2021

Comments:0

Jio மலிவு விலை ஸ்மார்ட்போன் செப்.10 முதல் விற்பனை – சிறப்பம்சங்கள் வெளியீடு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 44வது ஆண்டு பொதுக்கூட்டத்தில், ஜியோவின் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் நிறுவனர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஜியோ போன்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது போல, ஆண்ட்ராய்டு வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் நிறுவனர் முகேஷ் அம்பானி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த கூட்டணியின் விளைவாக இந்த புதிய போன் அறிமுகமாகவுள்ளது. இந்த வகையான ஜியோ போன் கூகிள் பிளே ஸ்டோர் அணுகலுடன் வாய்ஸ் அசிஸ்டன்ட், திரையில் தொன்றும் செய்திகளை தானாக படித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அம்சங்களையும் வழங்குகிறது. இது குறித்து ரிலையன்ஸ் பொது கூட்டத்தில் பேசிய அம்பானி, ‘இந்தியாவில் இன்றும் கூட 2G இணையவசதிகளை பெற்றுள்ள 300 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இன்று வரையும் ஒரு அடிப்படை 4G ஸ்மார்ட்போனை இந்த பயனர்களால் உபயோகிக்க முடியாததாகவே உள்ளது. கூகுள் மற்றும் ஜியோவின் அடுத்த தலைமுறையில், அதிக அம்சங்கள் நிறைந்த மலிவு விலையிலான ஸ்மார்ட்போனை உருவாக்குவது பற்றி சுந்தர் பிச்சை அவர்களிடம் பேசினோம். அந்த வகையில் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள தொலைபேசியின் பல அம்சங்கள் வெளிவந்திருந்தாலும், அதன் வெளியீட்டு தேதி செப்டம்பர் 10 என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொலைபேசியின் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மலிவு விலையிலான 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசியை அறிமுகப்படுத்தினால், ஷியோமி, சாம்சங், மற்றும் ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் குழப்பமில்லை. ஒரு மலிவு ஸ்மார்ட்போனுடன் 4G இணைப்பை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்காக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவை ஆண்ட்ராய்டு இயக்க முறையை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதிகள் உள்ள நிலையில், திரையில் தோன்றும் செய்திகளை தானாக படிக்கும் வசதியும், மொழிபெயர்ப்பு வசதியும், இதனுடன் சிறப்பு கேமரா உள்ளிட்ட அம்சங்களை ஜியோ நிறுவனம் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة