IFHRMS: e-SR பணிகள் (ஜூன்25 ம்-தேதிக்குள் முடிக்க) விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் தொடர்பாக மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 14، 2021

Comments:0

IFHRMS: e-SR பணிகள் (ஜூன்25 ம்-தேதிக்குள் முடிக்க) விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் தொடர்பாக மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்!

பொதுப்பணிகள் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை, தஞ்சாவூர் மாவட்ட கருவூல அலகு IFHRMS திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 01.09.2020 முதல் நடைமுறைப்படுத்தியது - முதன்மைச் செயலர் / ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது e-SR தொடர்பான பணிகளை உடன் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கியது - தொடர்பாக,

ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்ட நாள்: 10.06.2021, பார்வையில் காணும் ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி காட்சி ஆய்வுக் கூட்டத்தில் IFHRMS திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக e-SR தொடர்பான பணிகளை எதிர்வரும் ஜீன் மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது e-SR Correction மென்பொருளில் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்ள e-SR-ல் இன்றைய தேதிவரை உள்ள அனைத்து பணி தொடர்பான பதிவுகளையும் மேற்கொள்ள வசதியாக Edit Option வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஜீன் மாதம் 25 ஆம் தேதி வரை மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். எனவே, தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பணி தொடர்பான அனைத்து விவரங்களையும் உடன் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பணிப்பதிவேட்டில் முதல்பக்கத்தில் உள்ள Bio Data பகுதியை மட்டும் e-SR-ல் Correction செய்ய இயலாது. அந்த பகுதியில் ஏதும் பதிவுகள் விடுபட்டிருந்தாலோ அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலோ பணிப்பதிவேட்டின் முதல் பக்கத்தை Scan செய்து அதற்கு Ticket ஏற்படுத்தி சரிசெய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது... இவ்வாறாக அனைத்து பணிகளையும் ஜீன் மாதம் 25 ஆம் தேதிக்குள் முடிந்து இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட முழு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து பணம் பெறும் அலுவலர்களையும் அண்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة