கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறுகிய கால உடல்ந
லம் தொடர்பான பயிற்சி வழங்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் விண்
ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திர
பானுரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போதைய கரோனா தொற்றால் பாதிக்
கப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள உடல்நலம் தொடர்பான தேவையை மேம்படுத்திடும் வகையில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்- அடிப் படை, பொது கடமை உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர், மேம் பட்ட பொது கடமை உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில் நுட்ப உதவியாளர் ஆகிய 6 பிரிவுகளில் பயிற்சியாளர்களை உருவாக் கும் வகையில் அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயிற்சி வழங்குநர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப் பயிற்சியானது அதிகபட்சமாக ஒரு மாதத்தில் நிறைவு பெறும் வகையிலும், அதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும். திறன் இந்தியா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இணையத்தில் பதிவு செய்து அங் கீகாரம் பெற்ற பயிற்சி வழங்குநர்களும், இணையதளத்தில் பதிவு செய்து அங்கீகாரம் பெறாமல் உள்ளவர்களும் மற்றும் இதுநாள் வரை பதிவு செய்யாமல் மேற்கண்ட பயிற்சியை வழங்கும் கட்டமைப்பைக் கொண் டுள்ள பயிற்சி வழங்குனர்கள்,மருத்துவமனைகள் கல்லூரிகள் மாவட்ட திறன் குழுவிடம் தங்கள் விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று பயிற்சி
அளிக்கலாம்.
மேலும், இதுகுறித்து தகவல்களை ஒசூர் உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், 9499055837,9789681995 என்ற செல்லிடபேசி எண்களிலோ அல்லது adrichsr110@gmail.com என்ற மின்னஞ்ச
லிலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يونيو 01، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.