தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வி கட்டணம் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் புதிய கல்வியாண்டும் தொடங்கி விட்டது. கொரோனா பரவலும் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சேர்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா தீவிரம் காரணமாக 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுவையும் அரசு அமைத்தது. தற்போது அந்த குழு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க 5 வகையான முறைகளை பரிந்துரைத்துள்ளது. அதனை தொடர்ந்தது இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முதற்கட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். மேலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும் அதை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.