'தமிழக நீட் தேர்வு அரசியலில்' மாணவர்கள் சிக்கிவிட வேண்டாம்: கல்வியாளர் சங்கரநாராயணன் எச்சரிக்கை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يونيو 09، 2021

Comments:0

'தமிழக நீட் தேர்வு அரசியலில்' மாணவர்கள் சிக்கிவிட வேண்டாம்: கல்வியாளர் சங்கரநாராயணன் எச்சரிக்கை!!

“எந்த மாநிலத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; தமிழகத்தில் நடக்கும் 'நீட் தேர்வு அரசியலில்' மாணவர்கள் சிக்கிவிட வேண்டாம்” என கல்வியாளர் சங்கரநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:நீட் நுழைவு தேர்வால் பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான மாணவர் கூட எந்த சிறந்த கல்லுாரியிலும் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மருத்துவ படிப்புக்கு நீட் ஒன்று தான் அளவுகோலாக இருக்க முடியும். சி.பி.எஸ்.இ., மாணவரை பொறுத்தவரை அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான அனைத்து மதிப்பீடுகளும் பின்பற்றப்பட்டுள்ளன. ஆனால் மாநில பாடத்திட்ட மாணவருக்கு குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நாட்களே குறைவு. மதிப்பீடுகளுக்கான வழிமுறை இல்லை.அவர்களுக்கு அரசு அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கையானால் பயங்கரமான விளைவுகள் ஏற்படுத்தும். நன்றாக படிக்கும் மற்றும் படிக்காத மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீட் நாடு முழுவதும் நடக்கும் ஒரு நுழைவு தேர்வு. வேறு எந்த மாநிலங்களில் இருந்தும் இல்லாமல் தமிழகத்தில் மட்டுமே இதனை ரத்து செய்ய வலியுறுத்தப்படுகிறது.ஆனால், 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு மூலம் 400க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு கிடைத்ததை மறக்க கூடாது. நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். வரும் அக்டோபரில் இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்த திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வின்றி மருத்துவ சேர்க்கைக்கான வழிமுறை இல்லை.காங்., மாஜி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினி உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வாதாடிய பின் 'இனிமேல் யார் நினைத்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது' என கூறினார்.
ஆனால் அதை மறந்து அவர் சார்ந்த கட்சியினரே மாணவர்களை குழப்புகின்றனர். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்க்கும் கேரளா கூட நீட் தேர்வை எதிர்க்கவில்லை. தமிழக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் அரசியலுக்காக மாணவர்களை குழப்பக் கூடாது. நீட் தேர்வால் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறுவர். கிராம மாணவர்கள் பாதிப்பார்களே என்ற வாதமும் சரியானதல்ல. பாடத்தை கற்றுக் கொடுக்காததும், கற்றுக்கொள்ளாததும் யார் குற்றம். பிளஸ் 2 தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். அதற்காக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய முடியுமா. நீட் இல்லையென்றால் தமிழக மாணவர்கள் ஒரு கிணற்று தவளையாக மாறிவிடுவர். இத்தேர்வுக்கு தயாராக மாணவர்களை அரசு உருவாக்க வேண்டும்.மாணவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
ஊரடங்கு என்பது கொரோனாவிற்கு தான் மாணவர்களுக்கு இல்லை. ஆசிரியர் பாடம் நடத்தாமலும் கற்க முடியும். தகுதி மற்றும் அறிவை வளர்த்துகொள்ளுங்கள். கல்வியாளர்கள் அரசியலில் சிக்கி விடாதீர்கள் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة