பான் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 25، 2021

Comments:0

பான் கார்டில் உள்ள முகவரியை ஆன்லைனில் மாற்றும் எளிய வழிமுறைகள்!

நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒரு அடையாள அட்டையான பான் கார்டு தொலைந்து விட்டால் அல்லது முகவரி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக எவ்வாறு சுலபமாக செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பான் கார்டு திருத்தம்:
வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண் கொண்ட பான் கார்டு, பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த பான் கார்டு வரி செலுத்துதல், டிடிஎஸ், டிசிஎஸ் வரவு, வருமானம் என பல பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள உதவியாக உள்ளது.
இவ்வாறு முக்கியமான ஆவணமான பான் கார்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அல்லது பான் கார்டு தொலைந்து விட்டால் அதனை எவ்வாறு ஆன்லைன் மூலமாக சரி செய்யலாம் என விவரங்கள் குறித்த விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் NSDL, UTIITSL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் அப்ளிகேஷன் வகையின் கீழ், ஏற்கனவே உள்ள பான் தரவு / பான் கார்டின் மறுபதிப்பில் மாற்றங்கள் அல்லது திருத்தம், ரீப்ரிண்ட் பான் கார்டு (ஏற்கனவே உள்ள பான் தரவில் எந்த மாற்றமும் இல்லை) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பின் கீழே தனிநபர் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் பின்னர் கடைசி பெயர் / குடும்ப பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, நீங்கள் இந்தியாவின் குடிமகனா, உங்கள் பான் எண் என்ன உள்ளிட்ட பல விவரங்களை வழங்க வேண்டும்.
இறுதியாக விவரங்களை பதிவு செய்த பின்னர் இறுதியாக கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் என்.எஸ்.டி.எல் இ-கோவின் ஆன்லைன் பான் விண்ணப்ப சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி, உங்கள் கோரிக்கை டோக்கன் எண் xxxxxxx உடன் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது பான் பயன்பாட்டில் வழங்கப்பட்ட உங்கள் மின்னஞ்சல் ஐடியிலும் அனுப்பப்பட்டுள்ளது.
மீதமுள்ள பான் விண்ணப்ப படிவத்தை நிரப்ப கீழே உள்ள பட்டனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும் என்ற செய்தி வரும்.
நீங்கள் பான் விண்ணப்ப படிவத்தில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இது நேரடியான ஆன்லைன் பான் பயன்பாட்டு பக்கத்திற்கு செல்லும்.
இப்போது பான் அப்ளிகேஷனில் உங்கள் புகைப்படம், கையொப்பத்தைப் புதுப்பிக்க விரும்பினால், அந்த பக்கத்தில் உள்ள புகைப்பட பொருத்தமின்மை மற்றும் கையொப்ப பொருத்தமின்மை என்பதைக் கிளிக் செய்து செய்யலாம்.
அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு கட்டணம் செலுத்தப்பட்டதும், ஒப்புதல் சீட்டு உருவாக்கப்படும்.
அதனை பிரிண்ட் செய்து, அதனை தேவையான ஆவணங்களுடன் என்.எஸ்.டி.எல் இ-கோவ் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة