பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 06, 2021

Comments:0

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
ஊடகச் செய்தி
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 08/2021 நாள்: 06.06.2021
பாலியல் குற்றங்களில் ஈடுப்படும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால்,
சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர், பத்மசேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகப் பணியாற்றிய கெபிராஜ், சென்னை பிரைம் தடகளப் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டு கொண்டிருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (05.06.2021) மயிலாடுதுறை தனியார் பள்ளி ஆசிரியர் செய்யப்பட்டுள்ளார். அண்ணாத்துரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தமிழ்ச் சமுதாயம் காலங்காலமாகப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் உயர்ந்த தொழிலைச் செய்து கொண்டிருப்பவர்கள் ஆசிரியர்கள். அதற்கு இலக்கணமாக இன்றைக்கும் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இது போன்ற ஒரு சில கருப்பு ஆடுகளின் இத்தகு இழிசெயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப்பெரிய மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது பெற்றோர் குழந்தைகள் உறவைப் போன்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று ஆன்லைன் வகுப்புக்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்கப்பட வேண்டும். அக்குழுவில் பெற்றோர் ஆசிரியர் - சங்கப் பிரதிநிதிகள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள "விசாகா கமிட்டி” பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்திட மாநில அளவில் பரிந்துரைகளைப் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் பெற்று நடைமுறைப்படுத்திட வேண்டும். அவற்றை அனைத்துப் பள்ளிகளிலும்
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews