மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் – எய்ம்ஸ் இயக்குநர் கருத்து !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் – எய்ம்ஸ் இயக்குநர் கருத்து !!

இந்தியாவில் பள்ளிகளை விரைவாக திறக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த வருடம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை முழுவதுமாக திறக்கப்படவில்லை. இடையில் கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மீண்டும் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து காரணத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு வருட காலமாக அனைத்து மாநிலங்களிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர். ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் கல்வி என்பது எட்டாத கனியாக உள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இந்த வருடமும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டது. இணையவழி கல்வி கற்றலை 100 சதவீதம் உறுதி செய்யுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இணையம் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வண்ண வண்ணமாக படங்களை காண்பித்து நாம் பாடங்களை நடத்தினாலும் புதிய உத்திகளை பயன்படுத்தினாலும் அது வகுப்பறை கற்றலுக்கு ஈடாகாது. வகுப்பறை என்பது வெறும் கற்றல் கற்பித்தல் நிகழும் இடம் மட்டும் அல்ல. ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி திறமைகளை வளர்க்கும் இடம். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் சக மாணவர்களுடன் உரையாடுகிறார்கள். வேற்றுமை எண்ணமின்றி பழகுகின்றனர். குழந்தைகளின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே, மீண்டும் பள்ளிகள் திறக்க நாம் முயல வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மேலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews