பொறியியல் சேர்க்கை கொள்கை: சாஸ்த்ரா திருத்தியமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

Comments:0

பொறியியல் சேர்க்கை கொள்கை: சாஸ்த்ரா திருத்தியமைப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புச் சேர்க்கை 2021-க்கான கொள்கை திருத்திய மைக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-ஆம் ஆண்டு பொறி யியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை திருத்தியமைக் கப்பட்டுள்ளது. இதில், 50 சதவீத இருக்கைகளுக்கு பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடைபெறும். மீதமுள்ள 50 சதவீத இருக்கைகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்களையும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு மதிப்பெண்களையும் சரிசம விகித அடிப்படையில் கணக்கிட்டு சேர்க்கை மேற்கொள்ளப்படும். சாஸ்த்ராவில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு தனியாக ஏதும் நடத்தப்படமாட்டாது. மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியலைப் பெற்ற பிறகு, தங்களது விண் ணப்பங்களை இணையவழியில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதன் பின்னர் அதே நாளில் (ஜூலை 31) இரவு 9 மணிக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடை பெறும். மாணவர் சேர்க்கையில் தஞ்சாவூர், திருச்சி மாவட்ட மாணவர்க ளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பங்களை www.sastra.edu என்ற இணையதளத்தில் பெறலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews