பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூலையில் ஆன்லைன் தேர்வு – கவுன்சில் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூலையில் ஆன்லைன் தேர்வு – கவுன்சில் உத்தரவு!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் பருவத்தேர்வுகள் பலதேர்வு வினாக்கள் (MCQ) முறையில் ஆன்லைனில் நடத்தப்படும் என்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவு வெளியிட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள்:
உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 141 அரசு மற்றும் 1217 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. இங்கு ஆண்டுக்கு மொத்தம் 2.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு ஜூன் 22 அன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் செயலாளர் சுனில் குமார் சோங்கர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாணவர்களுக்கு பலதேர்வு வினாக்கள் (MCQ) அடிப்படையிலான தேர்வு ஜூலை மாதம் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் மனவர்களுக்கான ஒரு தேர்வும், மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கான தேர்வுகளும் நடக்க உள்ளது. 50 MCQ வினாக்களுக்கு 90 நிமிடங்களில் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்புகளில் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில், இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு ஒரு தாள் இருக்கும், மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தலா 50 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு வினாத்தாள்களும் இருக்கும். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு பயிற்சி அளிக்கும் விதமாக டெமோ தேர்வு ஒன்று முன்னதாக நடத்தப்பட இருக்கிறது. டெமோ தேர்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், பல மாணவர்கள் மாநிலத்தின் தொலைதூர பகுதியில் வசிப்பதால் இணைய வசதி குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews