ஜிமெயிலில் இமெயிலை Block செய்வது எப்படி? படிப்படியான வழிகாட்டுதல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 15، 2021

Comments:0

ஜிமெயிலில் இமெயிலை Block செய்வது எப்படி? படிப்படியான வழிகாட்டுதல்!

ஜிமெயிலில் இமெயிலை Block செய்வது எப்படி? படிப்படியான வழிகாட்டுதல்!
ஸ்மார்ட்போன், லேப்டாப், PC என அனைத்திலுமே Gmail வசதி கிடைக்கிறது. உங்களுக்கான மெயில், முக்கியமான ஆவணங்கள் மற்றும் நிகழ்வுகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒழுங்கமைக்க ஜிமெயில் உதவுகிறது. ஜிமெயில் ஒரு இலவச ஆன்லைன் மின்னஞ்சல் சேவை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது பயனர்களுக்கு மெயில்களுக்கான போதுமான ஸ்டோரேஜை வழங்குகிறது மற்றும் குறிப்பிட்ட மெயிலை எளிதில் தேடிக் கண்டறிய, எளிதில் பதில் மெயில்களை அனுப்ப என எல்லாவற்றிற்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
உங்கள் மெயில் அனுப்பும் ஒரு அனுப்புநரைத் block செய்யும்போது, அவர்கள் உங்களுக்கு அனுப்பும் செய்திகள் உங்கள் spam கோப்புறைக்குச் செல்லும். விளம்பரங்கள் அல்லது நியூஸ்லெட்டர்ஸ் போன்ற ஏராளமான மின்னஞ்சல்களை அனுப்பும் தளத்தில் நீங்கள் பதிவுசெய்திருந்தால், இந்த மின்னஞ்சல்களைப் பெறுவதை நிறுத்த, Unsubscribe இணைப்பைப் பயன்படுத்தலாம்.
இருந்தாலும் ஜிமெயிலில் மெயில்களை block செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவில் உள்ள படிப்படியான வழிகாட்டுதல் மூலம் அதை தெரிந்துக்கொள்ளலாம். ஒரு மின்னஞ்சல் முகவரியை எவ்வாறு தடுக்க:
●உங்கள் Android தொலைபேசி அல்லது டேப்லெட்டில், ஜிமெயில் (GMail) பயன்பாட்டைத் திறக்கவும்.
● செய்தியைத் திறக்கவும்.
● செய்தியின் மேல் வலதுபுறத்தில், More எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
● பின்னர் Block [Sender] எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
● நீங்கள் ஒருவரை தவறுதலாகத் தடுத்திருந்தால், மேற்சொன்ன வழிமுறைகளையே பயன்படுத்தி அவர்களை Unblock செய்யவும் முடியும். விளம்பர மின்னஞ்சல்களிலிருந்து விலக:
● உங்கள் Android தொலைபேசி அல்லது டேப்லெட்டில் GMail பயன்பாட்டைத் திறக்கவும்.
● இப்போது நீங்கள் Unsubscribe செய்ய விரும்பும் அனுப்புநரிடமிருந்து ஒரு மின்னஞ்சலைத் திறக்கவும்.
● செய்தியின் கீழே, Unsubscribe அல்லது Change Preferences என்பதை கிளிக் செய்யவும்.
● இந்த விருப்பங்களை நீங்கள் காணவில்லை எனில், குழுவிலகுவதற்குத் தேவையான தகவலை அனுப்புநர் வழங்கவில்லை. அதற்கு பதிலாக, அனுப்புநரைத் block செய்ய மேற்சொன்ன வழிமுறைகளையே பின்பற்றலாம் அல்லது செய்தியை spam எனக் குறிக்கலாம்.
குறிப்பு: நீங்கள் குழுவிலகிய (Unsubscribe) பின் அஞ்சல் பட்டியல் உங்களுக்கு செய்திகளை அனுப்புவதை நிறுத்த சில நாட்கள் ஆகலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة