உதவி பொறியாளர் உட்பட, 5,300 பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க விண்ணப்பம் பெற்ற நிலையில், தேர்வு நடத்தாததால், மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், 600 உதவி பொறியாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு; 1,300 கணக்கீட்டாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 பிப்., மார்ச் மாதங்களில் விண்ணப்பங்கள் பெற்றது. ஊரடங்கால், அந்த ஆண்டில் தேர்வு நடத்தவில்லை.நடப்பாண்டு துவக்கத்தில், 2,900 கள உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், மேற்கண்ட பதவிகளுக்கு, நடப்பாண்டு துவக்கத்தில் நடக்க இருந்த தேர்வை, மின் வாரியம் ஒத்திவைத்தது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ;
இதனால், முந்தைய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட, 5,300 பதவிகளுக்கு தேர்வு நடத்தி, ஆட்கள் நியமிக்கப்படுவரா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில், அவகாசம் அளிக்குக்குமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يونيو 01، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.