கோவை மாவட்டத்தில், 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், விரைவில் புதிய நியமனம் மேற்கொள்ள, வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில், விகிதாச்சார அடிப்படையில், மாணவர்களின் எண்ணிக்கை விட கூடுதலாக ஆசிரியர்கள் இருந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுக்கு, புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.பணி நிரவல் அடிப்படையில், தேவைக்கேற்ப இடமாறுதல் மட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பணி ஓய்வு, விருப்ப ஓய்வு மற்றும் கொரோனா தொற்று காரணமாக, ஆசிரியர்கள் பலர் உயிரிழந்துள்ளதால், மாவட்ட வாரியாக காலியிடங்கள் பட்டியல் திரட்டப்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், பதவி உயர்வுக்கான இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில், புதிய நியமனங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாவட்டத்தில், 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தாததால், இடமாறுதலுக்கு பிறகு, பதவி உயர்வு, புதிய நியமனங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.