அரசு இசைப் பள்ளியில் ₹400 கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 29، 2021

Comments:0

அரசு இசைப் பள்ளியில் ₹400 கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி, கோட்டைக்காவல் கிராமம், (செவித்திறன் குறை உடையோருக்கான அரசு உயர் நிலைப்பள்ளி அருகில்) சதாவ ரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் இயங்குகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான 1. குரலிசை 2.நாத சுரம் 3.தவில் 4.தேவாரம் 5.பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம் ஆகிய கலைப் பிரிவுக ளில் 3 ஆண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்ப டுகிறது. பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடக்கிறது. இதில், 13 முதல் 25 வயது வரை உள்ள ஆண்.பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாண்டுக்கு 3152, 2 மற் றும் 3ம் ஆண்டு கட்டணமாக 3120 மட்டும் செலுத்த வேண்டும்.

மாணவர்வளுக்கு இலவச பஸ் பய ணச்சலுகை, 16-17 வயதுடைய மாணவர் களுக்கு இலவச சைக்கிள், மாதந்தோறும் T400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் பெற நா.இர மணி தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ் சல், காஞ்சிபுரம் 631502 எனும் முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இசைப்பள்ளி அலுவல கத்தை 044-27268190, 944 257 2948, என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة