ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் வரும் 28ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம்! - செய்தி வெளியீடு - நாள்:26.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 26, 2021

Comments:0

ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் வரும் 28ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம்! - செய்தி வெளியீடு - நாள்:26.06.2021

ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் வரும் 28ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம்!
மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
- தமிழக அரசு
செய்தி வெளியீடு - நாள்:26.06.2021
26.06.2021 முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக அமுலில் உள்ள, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை, 28.06.2021 முதல் 05.07.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவில், வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்
ஏற்கனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வகை 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள், இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில், வரும் 28.06.2021 காலை 6.00 மணி முதல், 50 சதவிகித இருக்கைகளுடன், சார்புடைய போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளான, கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews