பள்ளிக் கல்வி தேசிய நல்லாசிரியர் விருது. 2021 → விண்ணப்பங்களை இணையதனம் மூலம் 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 07.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، يونيو 07، 2021

Comments:0

பள்ளிக் கல்வி தேசிய நல்லாசிரியர் விருது. 2021 → விண்ணப்பங்களை இணையதனம் மூலம் 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 07.06.2021

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண்.27576/8/2021 நாள். 07.06.2021.
பள்ளிக் கல்வி தேசிய நல்லாசிரியர் விருது. 2021 → விண்ணப்பங்களை இணையதனம் மூலம் 20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் தொடர்பாக Joint Scretary, MHRD, Department of School Education &Literarcy )New Delhi, Lr.No.P1-16/2021-NAT, Dt 31052021
பார்வையில் காணும் புதுடெல்லி, மனிதவன மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களை நேரிடையாக http:/nationalawardstoteachers.education.gov.in 20.06.2021 க்குள் என்ற இணையதன் முகவரியில் நேரிடையாக பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேரிடையாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியங்கள் விண்ணப்பிக்கக் கூடாது. 2020 ஆம் ஆண்டில் குறைந்தது 4 மாதங்கள் முறையான பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.(2020 ஏப்ரல் 30 வளர்) அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர்கள் 2000.2021 க்குள் மேற்குறிப்பிட்ட இணைய தனத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் விவரங்களை விரிவாக தங்கள் மாவட்ட நாளிதழில் செய்தி வெளியிட்டு, குறிப்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தங்கள் அளுகைக்கு உட்பட்ட அனைத்து சார்நிலை அதுவலர்களுக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கலாகிறது. அலுவலக விளம்பர பலகையில் விரிவாக விளம்பரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة