18 வயது நிறைவடைந்தோர் வாக்காளராக பதிவு செய்ய ஆண்டு முழுவதும் அனுமதி
மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிந்துரை
புது தில்லி, ஜூன் 2: 18 வயது நிறைவடைந்தவர்கள் ஆண்டு முழுவதும் பல் வேறு தேதிகளில் வாக்காளராகப் பதிவு செய்வதற்கு அனுமதிக்க வேண் டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்துள்ளார்.
இப்போது உள்ள நடைமுறையின்படி, ஓராண்டில் ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் முடியும். ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு 18 வயது நிறைவடைவோர் ஓராண்டு வரை காத்தி ருக்க வேண்டும். இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய பரிந்துரையை தலைமை தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது. இதுகுறித்து சுஷீல் சந்திரா புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதா வது: ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு 18 வயது நிறைவடைவோர் அந்த ஆண்டு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றும் வகையில், அவர்கள் ஆண்டு முழுவதும் வாக்காளராகப் பதிவு செய்ய குறைந்தபட் சம் 4 தேதிகளை நிர்ணயிக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் பரிந் துரை செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நீண்டகால பரிந்துரை வலியுறுத்தப் பட்டது. அப்போது, இதன் மீதான பரிசீலனை விரைவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இப்போது இருக்கும் சட்டப் பிரிவு 14(பி)-இன் படி, வாக்காளர் தகுதிக்கான தேதி ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் வாக் காளர் பட்டியல் தயார் செய்வது அல்லது மாற்றியமைப்பது ஜனவரி மாதம் முதல் தேதியை தகுதி நாளாக கொண்டு மட்டுமே செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.